சனி, 5 ஜனவரி, 2013

Beautiful

"Life is so Beautiful when you' re fall in the Love with your wife" 

உணர்வுகளும் உயிரும்

நான்  அன்றே  சொன்னேன்  சக  மனிதனை  தீண்டும்  போது   என்னால்  சுதந்திர உணர்வை  சுவாசிக்க முடியவில்லை என்று 
  ஆனால் இங்கு நடப்பதோ வேறு  அநாகரிக  படுத்தப்படுகிறான் ஆனால்  அதிலும்  பாகுபாடு தலைநகரத்தில் நடந்தால்  அது  முழுநேர  செய்தி  தென்னகத்தில்  நடந்தால்  அது  நிமிட  செய்தி இன்னும்  சற்று கடல் தாண்டி  நடந்தால்  செய்தியே கிடையாது  ஊடங்களை  நான்  ஒன்று கேட்டுகொள்ளுகிறேன்  சம்பவங்கள்  எங்கு  நடந்தாலும்  உணர்வுகளும்  உயிரும்  ஒன்றுதான் அதில் பாகுபாடு  பார்காதிர்கள்  உங்களுடைய  TRP  ரேடிங்கிற்காக !!!

கருப்பு பணம்

அமைதியாக  இருக்கும் கருப்பு பணம்  என் தாய்நாட்டில் ஆறாக  ஓடுவதற்கு  அந்நியனால்  அனுப்பப்பட்ட  ஒரு  தூது  "அந்நிய  முதலீடு " 

கருப்பு பணம் - வெள்ளப்பணம்  =  அந்நிய  முதலீடு !!

அந்நிய முதலீடு


கவியரசு  எழுதிய  "தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கு சொல்லுபவர்கள் தலைவர்கள்  ஆவதில்லையா"  
இந்த பாடல்   நான் பார்த்த இன்றைய  தலைவர்களுக்கு  பொருந்தவில்லை !!
 ஆதரவு  தருகிறோம்  மறைமுகமாக அது  என்ன  மறைமுகம்  இதற்கும்  அர்த்தம்  புரியவில்லை!
 இப்படி  புரியாமல்  செல்கிறது  இன்றைய ல்யசிரஅ  உலகம் .
  அந்த காலத்தில்  பேசமால்  சுதந்திரம் வாங்கமால் இருந்து  இருக்கலாம்  அன்று அவர்களை  என் நாட்டை  விட்டு போ என்றோம்,
  இன்று பச்சை கம்பளம்  போட்டு வரவேற்கிறோம்  அந்நிய  முதலீடு  ஆதிக்க சத்தியின்  வரவேற்பு !!

யதார்த்தம்

தொலைத்ததை  தேடும்  மனிதன்  நான்  ஆனால்  எதை  தொலைத்தேன் என்று தெரியாமலே !
 வாழ்கை என்றால்  எப்படி இருக்கும்  என்று  கணக்கு  போடுபவன்  நான்  ஆனால் யதார்த்தம்  தான்  வாழ்கை என்று தெரியாமலே !
  இவை  இரண்டையும் என் காதலில்  பார்த்தேன்  நான் எதையோ தொலைக்கவில்லை  என்  இதயத்தை  தான் என்னவளிடம் !
  காதலில்  மூழ்கியவர்களின்  வாழ்கையே  இங்கு யதார்த்தம் தான் அங்கு மூழ்கியவன்  முத்தெடுபான்  கரையை கடந்தவன் கள்ளியை கைப்பிடிப்பான் !!!!!!!!!................

சாதி மத வேறுபா


சுதந்திர  இந்தியா  மனிதனை  மனிதனாக  பார்க்காத  ஊரு   எல்லாம் வரும்  லோக்சபா தேர்தல்  குறிகோளைகொண்டு  இட ஒதிக்கீடு   நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன்,  மத்திய அரசே  முதலில்  பாகுபாடு  பாக்காமல் ஒருமைப்பாட்டுடன்  இருக்கலாம் என்று   மக்கள் நினைத்தால் கூட  நீங்கள் விடமாட்டேங்க  போல .. சாதி மத வேறுபாடு  ஒழியனும் நு  சொல்லிட்டு இப்படி  எங்களையை  வேறுபடுத்தி பாக்கறதுல என்ன சந்தோசம் உங்களுக்கு .  இப்படி இட ஒதிக்கீடு  கொடுதிங்க்னா  அப்ப  எப்பதான் திறைமைக்கு வழி விடுவிங்க!!
 சமரசம்  பேசும்   பெரியோர்களே  அதான் சமத்துவம்  என்று  மேடையில்  பேசும் அன்பர்களே   முதலில் சாதி என்றால்  என்னவென்று  அறியாமல் பள்ளியில் சேரும் குழந்தைகளிடம்  சாதி சான்றிதழ் சமர்பிக்க கூடாது என்று  முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள்  அங்கே ஒழியும் நீங்கள்  கேட்கும் சாதி மத வேறுபாடு !!!

சுதந்திர இந்தியா


வருடம் வருடம் ஆனால் நாம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்  அதை ஏன் கொண்டாடவேண்டும் என்று தோன்றுகிறது  ஆம்  சுதந்திரம்  வெறும் பேச்சில் மற்றும் எழுத்தில் தான்  இருக்கிறது  மூச்சு காற்றை சுவாசித்து கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லை . ஒரு பெண் இரவில் தனியாக  எப்பொழுது  பாதுகாப்பாக செல்கிறாளோ  அப்பொழுதுதான் நமக்கு சுதந்திரம் என்றார் காந்தி ஜி  , ஆனால் இங்கு ஒரு பெண் பகலில் கூட நடமாட முடியவில்லை  அஸ்ஸாம் இல் நடை பெற்ற சம்பவம்  மிகவும் கண்டிக்க தக்கது . சம்பவத்தில் நடைபெற்ற அனைவரையும்  நிக்கவைத்து சுட வேண்டும் அதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு  . ஒரு  பொது மக்கள் என்ற சார்பில் நான் வெட்கபடுகிறேன்  சுதந்திர  இந்தியா  என்  உள்ளுணர்வில்   இருந்தாலும்  என்னால்  காண  முடியவில்லை !! 
சக மனிதனை  தீண்டும்போது  !!