வியாழன், 9 ஆகஸ்ட், 2012

"நினைவுகள் "



அவளுக்காக  நான் எழுதிய  கவிதை  அவளிடம் சொல்லாத என்  காதலைப்போலவே  எனக்குள்  இருக்கிறது  அவளின் நினைவுகளோடு  !!

திங்கள், 23 ஜூலை, 2012

"விதி "


மனிதனாக பிறந்த நமக்கு மட்டும்தான்  நாம் விதி என்று நினைக்கிறோம்  ஆனால் , இயற்கையும் அதற்கு  விதிவிலக்கல்ல ஆம் நினைத்துபாருங்கள்  ஒரு நாளில் மலர்ந்து  மற்றொரு நாளில் உதிரும்  பூ  நினைதிருக்குமா !
அதன் ஆயிட் காலம்  பனியில் விழுந்த  நீர் துளிபோல்    இவ்வளவு சீக்கிரம்    முடியும் என்று !
  வாழுங்கள்  வாழ்கையை  வருத்ததோடு அல்ல  வசந்த்ததோடு !!!!
!

அதன் அர்த்தம்


நித்திரை கானும் இரவில்  என் விழிகள் இரண்டும்   விடைபெறும்  தருணத்தில்
கடந்த கால  நிகழ்வுகளை நினைத்து பார்க்கலாம் என்று தோன்றியது  ஆம் பள்ளிகூடத்து  கால நினைவுகள் !
 ஏதோ   எனக்குள் ஒரு சந்தோசம்  வற்றிய குளத்தில் தாமரை பூற்றாற்போல் இருந்தது , என் இதயத்திற்கு !
ஆம் அவளை பார்த்த அந்த ஒரு தருணம் ! இன்றும்  ரசிக்கிறேன்  அந்த நிகழ்வுகளை அதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் !!!

"கடவுள்"


காசு கொடுப்பவனுக்கு கடவுள் அவன் அருகில்  இருக்கிறார் ..
வரிசையில் நிற்பவனுக்கு சற்று தூரமாக இருக்கிறார் ...
ஆனால் பிச்சைகாரர்களுக்கு  தெரிவில் செல்லும் அனைவரும் கடவுளாக இருகிறார்கள்,
  அவர்கள் மனதில் !!!

"வாழ்கை "


"வாழ்கை "
காலம்  மாறிகொண்டிருக்கின்றது      என்று  நாம்  காலத்தை சுற்றிவரும்  "வாழ்கையை " இழக்கின்றோம் .

ஞாயிறு, 24 ஜூன், 2012

எதிர்பார்ப்பு !

எதிர்பார்ப்பு !

தன் தட்டில் விழும் காசுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் பிச்சைகாரன்போல்

தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்கிறார்கள் மின்சாரம் எப்ப வரும் என்று

வெட்கமா

ஏ பெண்ணே நீ என் அருகில் இருக்கும்போது உன் உதடு நடனம் ஆடும் அந்த தருணத்தின் மறுபெயர்தான் வெட்கமா !!!!


"சத்தியம்"

"சத்தியம்"

ஒருவன் தன்னை இக்கட்டான சூழ்நிலையிலும் நல்லவனாக பிரதிபலிக்க எடுத்துகொள்ளும் ஒரு ஆயுதம் !!!


தூது

இரு விழியும் இரண்டு அம்பு பாய்ந்தது என் இதயத்தில்


எதிர்த்துவிடலாம் என்று யோசித்தபோது

என் இதயம் சொன்னது உன்னையும் நேசிக்க இன்னொரு இதயம் தூதுவிட்ட ஒன்று தான் அந்த இரண்டு விழி!

ஏற்க சொன்னது என் இதயம் ஆனால்

இன்று ஏக்கத்துடன் காத்திருக்கிறது அவளின் நினைவோடு!!!!!

பைத்தியக்காரன்

நான் உன்மீது வைத்த "அன்பை" மரத்தின் கிளையில் அமர்ந்து பறந்து செல்லும் பறவையை போல் நீ நினைத்துவிட்டாய்

ஆனால் நான் ஒரு பைத்தியக்காரன் அம்மரத்தின் ஆணிவேர் போல் நினைத்துவிட்டேன் !!!


சித்திரம் போல்

கற்பனை என்றுதான் அவளை காதலித்தேன்

அது என்னவோ தெரியவில்லை நாளடைவில் அது

கல்வெட்டில் பதிக்கப்பட்ட சித்திரம் போல் ஆனது என் இதயத்தில்!!!!




பவுர்ணமிபோல்

நட்சத்திரத்துக்கு ஒரு சந்தோசம் ..

நித்திரை இரவில் சித்ரா பவுர்ணமிபோல் தோன்றும் அவளது முகத்தை பார்ப்பதால் !!!


"வெட்கம்

"வெட்கம்"

பருவம் கொண்ட மங்கயைபோல் வெட்கத்தில் சாய்ந்து கிடக்கிறது களனி நெற்கதிர்!!!


ஆட்டோகிராப்

தவமாய் தவமிருந்து அவளை காதலித்தேன்


ஆனால் இன்று அவள் ஆட்டோகிராப் ஆக என் இதயத்தில் !!!

கொலுசு சத்தம்

மார்கழி மாதத்தில் மல்லிகையின் வாசனை அதிகம் இருக்கிறதோ இல்லையோ மங்கையின் கொலுசு சத்தம் மட்டும் ஒலித்துகொண்டே இருக்கும் கோவிலை நோக்கி !!!


உன்னை ரசிக்கிறேன்

எ பெண்ணே உன் பெயரை உன்னைவிட நான்தான் அதிகமுறை எழுதிபார்த்து இருப்பேன் கையெழுத்து பயிற்சிக்காக இல்லை ! தனிமையில் இருக்கும் எனக்கு உன் பவுர்ணமி முகத்தை பார்க்க முடியவில்லை என்று,

அதனால் தான் உன் பெயரின் மூலம் உன்னை ரசிக்கிறேன் !!!




தனிமையின் கொடுமை

தனிமையின் கொடுமை !!

அறையில் தனிமையில் இருக்கிறேனென்று கடற்கரைக்கு சென்றேன் !

ஆனால் அங்கும் என்னை தனிமை வாட்டியது, அங்கு வருகை தரும் ஜோடிகளை பாத்து !!!


அனுபவம்

கல்வி என்பது சிலை செதுக்குற கல்லு மாதிரி ,


ஆனால் அனுபவம் என்பது அதை செதுக்குற சிற்பி மாதிரி !

ஒரு மனிதன் சேர்க்க வேண்டிய சொத்து அனுபவத்தைதவிர வேறொன்றும் இல்லை !!!

"பிரிவு"

"பிரிவு"


எதோ ஒன்றை தொலைத்ததுபோல் இருந்தது ஆம் அவளை விட்டு பிரிந்த அந்த ஒரு நிமிடம் !

காலமும் கரைந்துகொண்டுதான் போகுது தண்ணீரில் மூழ்கிய சர்க்கரைபோல்

ஆனால் பெண்ணே என் வாழ்கையில் மூழ்கிய உன் இதயம் மட்டும் ஏன் அப்படியே இருக்கு என்றுதான் எனக்கும் தெரியவில்லை !!!!!